மனங்களை மென்மையாக்கும் அழைப்பு | அ. சந்தோஷ்

அந்த அருட்தந்தை எப்போதாவதுதான் அழைப்பார். ஆனால், மனம் அந்த அழைப்புக்காக தவித்துக் கிடந்திருக்கிறது என்பதை, என்னை அறியாமலேயே அழைப்பை ஏற்க நீளும் கைகளின் செயல்களிலுந்து புரிய வரும். அந்தக் குரலில் கூதூகலம் ஏராளம், நலம் விசாரிக்கும் குரலின் இனிமை மழைலையைத் தழுவும் தாயின் கரங்களுக்கு நிகரானாதாக இருக்கும். பேச்சு முழுக்க பாராட்டின் வார்த்தைகள் நிரம்பி வழியும். அழைப்பு முடித்து அவர் வைக்கும் போது, ஏதோ ஒரு புது உத்வேகம் மனதில் துளிர்க்கும். சோம்பல் தொலையும். மனக்குழப்பங்கள் விலகும். சந்திக்கும் மனிதர்களை எல்லாம் புன்னகையோடு ஏற்க மனம் விரும்பும். அடைய முடியா ஒன்றை அடைந்துவிட்டதான மகிழ்ச்சியும் உள்ளம் முழுக்க வழிந்தோடும். இப்போது அவரது குறுஞ்செய்தியும் எப்போதாதவது எட்டிப்பார்க்கிறது. திரும்ப திரும்ப வாசிக்கத் தூண்டும் நலம் விசாரிப்புகளும் வாழ்த்துகளும். நமது அழைப்புகளும் குறுஞ்செய்திகளும் எல்லாம் இப்படி இருந்திருந்தால் மனிதர்கள் எல்லாம் மென்மையாயிருப்பார்கள்.

photo: pixabay.com


கருத்துரையிடுக

0 கருத்துகள்