உறவுகள் வலுப்பட்டு அன்பு பெருகும் என்னும் எண்ணத்தில் குறுஞ்செய்திகள் வழியாக வாட்ஸ்அப் பயன்படுத்தி இரவு 10 மணிக்குப் பேசத்தொடங்கினான் அவன். புரிதலில்லாத உறவுகள் நீடிக்காது ஒருவர் மற்றவருக்கு மனவருத்தத்தையே ஏற்படுத்தும் என்று பலர் சொல்லக் கேட்டிருந்தான். ஆகையால் இன்று எல்லாவற்றிற்கும் முடிவு கட்ட வேண்டும் என்று சொல்லி, செய்திகள் வழியாக புரிதல் உருவாக்கத் தொடங்கினான். பேசத் தொடங்கி 15 நிமிடத்திற்குள் மறுமுனையில் அலைபேசி 2 முறை ஆஃப் செய்யப்பட்டு ஆண் செய்யப்பட்டது. மொபைல் அணைந்த இடைவேளைகள் திகிலுடன் கடந்தன. அவ்வேளையில் அவனது இதயம் பதைபதைத்தது. இடையில் மூச்சு நின்று போகும் அளவிலான உருளைகள் கழுத்து வரை உருண்டு நின்றுவிட்டன.
பிறகும் தொடர்ந்தன தற்கொலை மிரட்டல்கள்... பிரியலாம் என்ற ஆணவப் பேச்சுக்கள்... இரவு முழுவதும் அல்லோலகல்லோலப்பட்டது. நிம்மதிக்காய், புரிதலுக்காய் தொடங்கிய உரையாடல்கள் பெரும் ரணங்களை ஏற்படுத்தி விடிந்தது. இப்போது உறவு பல விரிசல்களையும் கீறல்களையும் சந்தித்து அந்தரத்தில் தொங்கும் உணர்வு.
அன்பு விசாலமானது, ஆழமானது, உயரமானது, நீளமானது. எல்லாம் கைக்குள் ஒதுக்கலாம் என்றால் முடிவதில்லை. அன்பு இரகயசிங்களில் வளர்கிறது. இறையருளில் நனைந்து உயிர்ப்பது. தெளிவின்மையில் நூலிழையாய் இழைந்தோடுகிறது . இவற்றை புரிந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். அன்பு சுதந்திரமானது, அதை யாரிடமிருந்தும்.
வலுக்காட்டாயமாக வாங்கிவிட முடியாது. யாரிடமும் திணிக்கவும் முடியாது. இவை இரண்டும் அச்சுறுத்தல்களில் முடியும். காயங்கள் மிஞ்சி காலம் மிச்சக்கதை பேசும்.
0 கருத்துகள்