சுதந்திரத் தாகம் பட்டாம்பூச்சிகளுக்கு
பறந்துயர அனுமதிக்கப்படுகின்றன
உள்ளம் வஞ்சகர்களின் பிடியில்
மீள எத்தனித்தும் தோற்கின்றன
வண்ணத்துப்பூச்சிகள் சிறைகளுக்குள்
சிக்கித்தவிக்கின்றன ஏக்கத்துடன்
சுயச்சிறைகள் பலதும்
நினைவுகளின் திணிப்புகள்
நிழல்கள் நினைவாய் நிஜத்தை ஆள்கின்றன
சிறகின் பாரம் ஏறப் பட்டாப்பூச்சிகள் சுயச் சிறைகளுக்குள்
நினைவுகள் மன்னிப்புகளாய் லேசாகின்றன
பட்டாம்பூச்சி சிறகடித்துயர தயாராகிறது
சிறிது காலம் சுற்றித் திரிந்து மீண்டும் சிறைக்குள்
0 கருத்துகள்