நம்முள் பெரும்பான்மையினர் நவீன தகவல் தொழில்நுட்பக் கருவிகளால் வழிநடத்தப்படுகிறார்கள். இதில் சந்தேகம் இல்லை. அலைபேசிகள், அவை கொண்டிருக்கும் விதவிதமான செயலிகள் (Apps), விளையாட்டுகள் (Mobile Games) எல்லாம் நம்மை மெய்நிகர் (Virtual Reality) உலகின் பிடியில் தக்க வைத்துக் கொண்டிருக்கின்றன. தொழில் நுட்பம் தரும் மகிழ்வும், விறுவிறுப்பும், சவால்களும் இளைஞர்களை கவர வல்லனவாய் இருக்கின்றன.
இடைச்சொருகல்
ஏன் இளைஞர்கள்? வயது வரம்புகள்
இன்றி அனைவரையும். இது சாத்தான் (Mobile
Phones, Smart Phones) என்று ஒதுக்கி வைத்த பெரியவர்கள் இதன் முழுநேர அடிமைகளாய்ப்
போன வரலாறு நம்முடையது.
முதல் பத்தி தொடர்ச்சி
தகவல் தொழில் நுட்பம் (Infotech), மெய்நிகர் உலகம் (Virtual Reality) கொண்டிருக்கும் மெய்சிலிர்க்க வைக்கும் வித்தைகள் எல்லாம்
சார்பற்றவை (Neutral). அவை, நம்முடைய
ஆளுமையையும், புலன்களின் திறன்களையும் கற்பனைத் திறன்களையும் கற்கும் வேகத்தையும்
அதிகரிக்கப பெரிதும் உதவும் என்பதில் சந்தேகமில்லை. நடனம் இப்போதுள்ள எல்லா
பிள்ளைகளுக்கும் எளிதாய் வாய்க்கிறது. நளினம், வேகம், படைப்பாற்றல் ஆகியவை 90
களில் வாழ்ந்த பலருக்கும் எட்டாக்கனிகள்.
அதே வேளையில், அது நம்மை சுயம் இழக்கச் செய்து அதன்
அடிமையாக மாற்றலாம். அது நமக்கு பணிவிடை செய்வதற்குப் பதிலாக, நாம் அதற்கு பணிவிடை
செய்யும் நிலைக்குத் தள்ளப்படலாம். முழு நேர விளையாட்டுகள், முழு நேர
தொடுநிரை சுகங்கள்... அது காட்டும்
விளம்பரங்கள், காட்சிகள் அவற்றிலே மூழ்கிக் கிடத்தல்...
அருவருப்பான சொல்
காதுகளில் எந்நேரமும், Headphone சொருகி வைத்து, தொடுநிரையை நோண்டியும், பார்த்தும்
வீதிகளில் சுற்றுபவர்களை Zombie என
ஆங்கிலத்தில் அழைக்கறார்கள். அது அவ்வளவு நல்ல பெயர் அல்ல. அச்சொல்லிற்கு சோம்பை,
பிணன், முட்டாள், அலட்சியவாதி என்றெல்லாம் அர்த்தங்கள் உள்ளன. அவர்கள் எதிர்வரும்
யாரையும் பார்ப்பதில்லை.
ஆணவம்
ஆங்கிலத்திலும் சரி தமிழிலும் சரி, நீங்கள் என்னை என்னப்
பெயர் சொல்லி அழைத்தாலும் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை, ‘நான் நானாகவே இருப்பேன்’ என்று சொல்வது இக்காரியத்தில் அறிவுபூர்வமானது அல்ல. சற்றே சிரம்தாழ்த்தி
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய் முதியோர் சொல்லி வந்த, உன்னை அறிவாய் (Know Thyself) என்னும் வேண்டுகோளை சிந்தையில்
வைத்தலே நல்லது. இல்லையென்றால், இதோ காலம் வருகிறது, நீங்கள் மகிழ்ச்சியாய்
இருக்கிறீர்களா, சோகமாய் இருக்கிறீர்களா, நீங்கள் விவேகியா, முட்டாளா என்பதை
நீங்கள் தொடுதிரையில் நடத்தும் ஒவ்வொரு தொடுதல்கள் வழியாகவும் அறிந்து
கொள்வார்கள். அவர்கள் தங்கள் வியாபார உத்திகளுக்கு ஏற்ப உங்களை அடிமையாக்கி,
உங்களை தகவல் தொழில்நுட்பத்திற்கு அமைதியாய் சேவை செய்யும் அடிமையாக மாற்றி
விடுவார்கள். Mobile போண்
என்னுடையது அதை என் விருப்பப்படி பயன்படுத்துவேன் என்று கூறும் அடாவடி ஆணவத்தை
நீங்கள் சுதந்திரம் என்று கூறினால், பெரும் தவறு. அது சுதந்திரம் அல்ல,
அடிமைத்தனம்.
கேள்வி:
அலைபேசிகளும் இதர ஊடகங்களும் விளம்பும் மெய்நிகர் (Virtual Reality) உலகிலிருந்து நான் எதைப்
பெற்றுக் கொள்ள விரும்புகிறேன்?
கூடுதல் தகவல்
பல தகவல்களை அறிந்து கொள்கிறேன் என்று சொன்னால் அது
முற்றும் சரியல்ல. நீங்கள் அறியும் தகவல் உண்மையானதா என உறுதிப் படுத்த மேலும், 30
நிமிடம் தொடுநிரையில் செலவிட வேண்டும். அதன் பின் கிடைத்த தகவல்களை எல்லாம் வைத்து
சிந்தித்துப் பார்க்க வேண்டும். “கண்ணால்
காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய். தீர விசாரித்து அறிவதே மெய்” என்ற முதுமொழி காலாவதி ஆகிப் போய் விடவில்லை. நீங்களே
யோசித்துப் பாருங்கள். நீங்கள் கண்களால் பார்த்த எவ்வளவோ காணொளிகளுக்குள் (Vidoes) பொய்கள் இருந்திருக்கின்றன; உண்மைத் திரிபுகள் நடந்திருக்கின்றன.
கேள்வி தொடர்கிறது
அது எவ்வகையில் எனது ஆளுமையை தீர்மானிக்கிறது? எனது எதிர்காலத்தை நிர்ணயிக்கிறது? இக்கேள்விகள் இன்று அவசியம். நான் எதுவாக இருக்க வேண்டுமோ
அதுவாக இருக்கிறேனா? இல்லை சோம்பை
ஆக, Mobile Phone என்னும்
எந்திரத்திற்கு அடிமையாக மாறி, பெரும் நிறுவனங்களின் பயன்படு பொருளாக மாறுகிறேனா?
உன்னை அறிவாய்
“உன்னை அறிவாய்” know thyself –
என்னும் காதுகளுக்கு வெகுவாய்ப் பழக்கப்பட்டுப்போன முதுமொழி எக்காலத்தையும்
விட 21 ஆம் நூற்றாண்டில் அதிகமாக அவசியப்படுகிறது. Who am I? What am I for? நான் யார்? நான் எதற்காகப்
படைக்கப்பட்டிருக்கிறேன் கேள்விகளை இந்த ஊரடங்கு நாட்களில் அழுத்தமாகக் கேட்போம்.
இல்லையென்றால், தகவல் தொழில்நுட்பம் நம்மை தின்று ஏப்பம் விடும்.
0 கருத்துகள்