போர்முனையில் முழங்கும் பீரங்கிகளுக்கும்
இமைப்பொழுதில் தாக்கி வீழ்த்தும் துப்பாக்கி குண்டுகளுக்கும்
நடுவில் வீரமும் பலவீனமும் தாங்கி
நாட்டைக் காக்கும் நினைவுகளுடன்
நிற்கும் இளம் வீரனைப் போல
photo:pixabay.com
கட்டிடப்பணியில்
இரண்டாம் மாடிக்கு காண்கிரீட் போடும்
மனிதச் சங்கிலியின் இடை இணைப்பாய்
தன்னை நம்பியிருக்கும் ஏழு வயிறுகளின் நினைவுகளுடன்
அசையும் சாரக்கட்டின் கம்பின் நுனியில்
வீரமும் பலவீனமும் பூண்டு
அப்பா சிமெண்ட் சட்டி ஒரு கரம் வாங்கி
மறு கைக்கு நொடிப்பொழுதில் கடத்திக் கொண்டிருந்தார்.
உயிர் ஊசாலாடிக் கொண்டிருந்தது.
வாழ்வா சாவா என
0 கருத்துகள்