திருப்பலி வருகைப் பாடல்
விடிந்தும் விடியா
பொழுதில் ஒலிக்கும் ஆலய மணியின் ஓசை
தேடித் தொலைத்த மகிழ்வை நெஞ்சம் மீண்டும் அடைய ஆசை
விடிந்தும் விடியா பொழுதில் ஒலிக்கும் ஆலய மணியின்
ஓசை
தீராத அருளே
தேடித் தொலைத்த மகிழ்வை நெஞ்சம் மீண்டும் அடைய ஆசை ஆசை
விண்ணகம் சாய்ந்தே
கைகள் நீட்டியே
அள்ளி அணைக்குதே அருளை பொழியுதே
மேகம் தூவும் மழையில் நனைந்து
மலரும் கனியும் நல்கும் நிலமது
செவியில் புகுந்தே உள்ளில் கலந்து
செவியில் புகுந்தே உள்ளில் கலந்து
வாழ்வில் மலரும் இறையின் மொழியது
மண்ணில் விழுந்து மடிந்து முளைத்து
கனிகள் ஈயும் செடியின் விதையது
கனிகள் ஈயும் செடியின் விதையது
பலியில் கரைந்து உறவில் உயிர்த்து
வாழ்வை அளிக்கும் அருளின் வரமது
தேடும் நேரம்
அருளை
தேடும் நேரம்
விடிந்தும் விடியா
பொழுதில் ஒலிக்கும் ஆலய மணியின் ஓசை
தேடித் தொலைத்த மகிழ்வை நெஞ்சம் மீண்டும் அடைய ஆசை ஆசை
தீராத அருளே தீராத அருளே
அருவி அருகில் நீரில்
நனைந்து
கனிகள் நல்கும் உயர்ந்த மரமது
அருளின் கரையில் நிலைத்து வளர்ந்து
அருளின் கரையில் நிலைத்து வளர்ந்து
நல்வினை புரிதல் வாழ்வின் பலனது
பறவை தங்கிட உயர்ந்து விரிந்து
நிழலும் அளிக்கும் மரத்தின் கிளையது
நிழலும் அளிக்கும் மரத்தின் கிளையது
இறையின் அருளும் மனதை விரித்து
அன்பும் நட்பும் பகிர்வும் வழங்குது
தேடும் நேரம்
அருளை
தேடும் நேரம்
விடிந்தும் விடியா
பொழுதில் ஒலிக்கும் ஆலய மணியின் ஓசை
தீராத அருளே
தேடித் தொலைத்த மகிழ்வை நெஞ்சம் மீண்டும் அடைய ஆசை
விண்ணகம் சாய்ந்தே
கைகள் நீட்டியே
அள்ளி அணைக்குதே அருளை பொழியுதே
விண்ணகம் சாய்ந்தே கைகள் நீட்டியே
அள்ளி அணைக்குதே அருளை பொழியுதே
0 கருத்துகள்