பெரிதாகும் தலை | அ. சந்தோஷ்

மூளையில் பல அடுக்கடுக்காக 
ஒன்றன் மேல் ஒன்றாக எல்லாம் ஏறி அமர ஆரம்பத்திருக்கின்றன
நான் நடக்கும் விதம் மாறியிருந்தது என்னை வித்தியாசப் படுத்திக் கொண்டேன்
எங்கும் முழக்கங்ள் காதைக் கிழித்துக் கொண்டிருந்தன
ஒலியின் ஆதிக்கத்தால் அவை எனக்குள் வேரூன்ற பிரயத்தனப்பட்டன
அவை வேர்களை இறக்க முடியவில்லை என்றாலும் படிமங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருந்தன. வாக்குள் எல்லா இடங்களிலிலும்

படிமங்கள் எல்லாம் ஒற்றைப் பாதையில் பயணிப்பதற்காக உந்திக் கொண்டிருந்தன
ஞானம் பொதிய பல அடுக்குகள். தகவல்கள் கொள்கைகள் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்தன. 
ஞானம் மேலெழும்ப முடியாமல் திணறியது
வண்ணங்கள் பல அழகுகள் எல்லாம் மறைக்க எத்தனிப்புகள்
அதிகாரத்தின் தோரணை மட்டும் எங்கும்
தலை பெரிதாகிக் கொண்டிருந்தது



கருத்துரையிடுக

0 கருத்துகள்