மனக்குழப்பம்: முட்டாள் அறிவாளியும் அறிவாளி முட்டாளும் | அ. சந்தோஷ்

'முட்டாள்' கேட்டான், வாழ்வின் நோக்கம் என்ன?  அவன் (முட்டாள்) கிடக்கிறான். அவன் என்னத்தச் படிச்ச என்னத்த சாதித்தான். 'அறிவாளி' புலம்பித் தள்ளினான். நகைத்துத் தள்ளி 'முட்டாள்களை' புறந்தள்ளக் கற்றுக் கொண்டிருந்தான் 'அறிவாளி.' 

 'அறிவாளி' பல 'நோக்கங்களை' கொண்டிருந்தான் வாழ்வில். தொலைநோக்கு, வாழ்வின் இலக்கு, நீண்டநாள் இலக்கு, வாழ்வின் திருப்புமுனை, குறுகிய இலக்கு, தற்கால இலக்கு, அடுத்து நிமிடத்திற்கான இலக்கு என பல இலக்குகளால் வதைத்துக் கொண்டிருந்தான் 'முட்டாள்.' அவன் போதிக்கத் தொடங்கினால் நிறுத்த மாட்டான். போதனையின் விளைவாக செவியில் இரத்தம் வரும். போதனை செய்து உலகத்தைக் கொல்லவா 'முட்டாள்கள்' பிறந்திருக்கிறார்கள்? வடிகட்டிய முட்டாள்கள். நாங்கள் எவ்வளவோ பெரிய நோக்கங்களைக் கொண்டிருக்கிறார். நோக்கத்தை ஏன் நீ, பிரிக்க வேண்டும். உடலை இயக்கும் ஆசைகளோடல்லவா நடக்க வேண்டும். உடல் எதை விரும்புகிறதோ அதை அல்லவா செய்ய வேண்டும். வேறு பல முட்டாள்கள் இருக்கிறார்கள், அதை Instinct என்று அழைக்க, அல்லது Id என்று சொல்ல. அதைக் கீழ்த்தரமான உணர்வாக சித்தரிக்க அவர்கள் முயன்றுக் கொண்டிருக்கிறார்கள். பித்துப் பிடித்து அலைகிறார்கள்.

இந்த முட்டாள்களைப் பற்றிய சிறிய விளக்கத்தை நான் கொடுக்கிறேன். அவர்கள் மெத்தப் படித்தவர்கள் என்று மார் தட்டிக் கொள்கிறவர்கள். சமூகத்தின் பெரிய அந்தஸ்துகளில் வாழ்ந்ததாக கூறிக் கொள்பவர்கள். அவர்களுடன் சமூகத்தின் பணக்காரர்களோடு சகவாசம் வைத்துக் கொண்டவர்கள். அரசையும் அரசு இயந்திரத்தையும் கட்டுப் படுத்தும் பல்வேறு அலுவலகங்களில் பணியாற்றிவர்கள். அவர்கள், ஏதோ பெரிதாக சாதித்து விட்டார்களாம். அவர்கள் கூறுபவை ஞானமாம், நாங்கள் கூறுபவை எல்லாம்  அபத்தங்களாம். 

எங்களுக்கென நோக்கங்கள் உண்டு. காலையில் எழுந்தவுடன் உண்பதே நோக்கம் தான். இன்று வயிற்றுப் பசிக்காக, எவ்விடத்தில் வேண்டுமானாலும் செல்லலாம். வயிறு முக்கியமல்லவா? அது கேட்கும் போது எப்பாடுப் பட்டாவது அதை நிரப்ப வேண்டாமா? மது அருந்த உடல் ஆசைப் படுகிறது. அது தரும் போதையில் மிதந்து நடப்பது சுகமாக இல்லையா?  அது ஆனந்தம் இல்லையா? அந்த உடலின் ஆசையை திருப்திப் படுத்துவதில் அடங்கியிருக்கும் அலாதி சுகத்திற்கு நிகராக வேறேதும் உண்டோ? முட்டாள்கள் போதிக் வந்திருக்கிறார்கள். இன்று நாங்கள் குத்தாட்டம் போடப் போகிறோம். அதுவல்லவோ சுகம். வாழ்வின் இலக்கு இதை விட பெரிதாக எது இருக்க முடியும்.

அவன் என்ன பெரியவனா? முட்டாள்கள். நான் அவனை விட பெரியவன் இல்லையா?  அவன் என்ன தலைவனா? நான் அவனை விடப் பெரிய தலைவன் அல்லவா? யார் தலைவர்? யார் தீர்மானிக்கிறார்? அவனா தீர்மானிக்கிறான். அவனுக்கு அவன் தலைவனாக இருக்கலாம். ஆனால் எனக்கு நானே தலைவன். ஞானம் எவ்வளவு விசித்திரமாக வந்துக் கொண்டிருக்கிறது. நீ மனுஷனே இல்லடா என்று 'முட்டாள்' என்னைப் பார்த்துக் கூறுகிறான். இல்லாமல் போகிறேன். நீ மட்டும் மனிதனாக இருந்து விட்டுப் போ. 

நான் எங்கு சுகம் கிடைக்கிறதோ அங்குச் செல்வேன் உனக்கென்ன. நான் மனைவியிடம் அப்படித்தான் பேசுவேன். பிள்ளைகளா? அவர்கள், அவர்கள் விருப்பம் படி வாழட்டும். நான் எதற்கான என் வாழ்வை அவர்களுக்காகக் கெடுக்க வேண்டும். நான் குடிப்பேன், போதை போடுவேன். ஆண்/பெண் சுகம் தேடுவேன். நான் அதற்கு Open Relationship என்று பெயர் போடுவேன் (https://www.bbc.com/worklife/article/20220725-the-rising-curiosity-behind-open-relationships).  அன்பா அது என்ன? அன்பென்றால் என்ன? நான் தேடியதை அவன்/அவள் கொடுத்தாள்/ன். அத்தோடு முடிந்து போய் விட்டது. அதற்குள் நீடித்த உடன்பாடுகள் எதுவும் இல்லை. நீ யாரோ? நான் யாரோ? முட்டாள்கள் நீண்ட கால உறவுகளைப் பற்றிப் பேசித் திரிகிறார்கள். அன்புக்குள் சேவை வேண்டுமாம், தியாகம் வேண்டுமாம், விட்டுக் கொடுக்க வேண்டுமாம், அது அழியாமல் இருக்க வேண்டுமாம் அது நீடித்து இருக்க வேண்டுமாம். இவைகள் அனைத்தும் முட்டாள்களின் பித்தலாட்டங்கள்.

photo: pixabay.com

எனக்கென்ன வேறு நோக்கம் இருக்க வேண்டும்?  

நீ செய்வதற்கென சமூகத்தில் சில காரியங்கள் இருக்கின்றன. அதைச் செய்து முடிக்க வேண்டாமா? ஐயே... இவன் யாருடா? ்அவனுக்கு வேண்டி நான் ஏன் செய்யணும். அவன் வாழ்ந்தா சரி, கெட்டா சரி. நாளைக்கு உனக்கு யாராவது பதிலுதவி செய்ய வேண்டாமா? நாளையா? அது என்ன? இன்று நான் வாழ்கிறேன்.உண்கிறேன். ஜாலியா இருக்கிறேன். 

நீ சம்பாதிச்சியா? சம்பாதிக்கவில்லை என்றால் என்ன? நான் சாப்பிட்டால் போதாதா? உன்னை அன்பு செய்ய யாராவது வேண்டாமா? யார் வேண்டும்? எனக்கு சுகம் தரம் இப்போது ஆள் இருக்கிறார்கள். அதை நான் செய்வேன். 

'முட்டாள்கள்' இல்லாத இடம் வேண்டும். ஓடி விட வேண்டும். குடும்பம், தியாகம், சேவை, அன்பு, விட்டுக் கொடுத்தல், நாளைய வாழ்வை அமைத்துக் கொள்ளுதல், சமூகத்திற்கு சேவை செய்தல்... என்னும் நீண்டப் பட்டயலுடன் சுற்றித் திரிகிறார்கள். மெத்தப் படித்தவர்களாம். அனைத்தையும் கரைத்துக் குடித்தவர்களாம். உலகை ஆளப் பிறந்தவர்களாம். உலகை ஆள வேண்டும் என்று உன்னிடம் சொன்னது யார்? நீ ஆண்டிட்டுப் போ. என்ன ஏன் தொந்தரவு பண்ற. உன் ஐடியாஸ் எல்லாம் ஏன் என் மேலத் திணிக்கிற. உன்னப் போல வாழுறதுக்கு எனக்குப் பிடிக்கல. 

நிதானமாக யோசித்துப் பார். உனக்குள் நிறைவேறாத ஒரு தாகம் இருக்கும். எதைச் செய்தாலும் முடிவடையாத தாகம். ஐயோ. எனக்கு உக்கார நேரம் இல்ல. அப்படி என்னப் பற்றி யோசிச்சு என் மனச குழப்பிக்க  விரும்பல. பழச நோண்டி நோண்டி என்ன நான் துன்புறுத்த விரும்பல. 

காயம் ஆறும். அது ஆறினால் என்ன, ஆறாமல் போனால் என்ன. நான் நாள வாழந்து தான் என்னச் செய்யப் போறேன். 

கடவுள் இருக்கிறார். அவர் முன்னால் நீ ஒழுங்காக வாழ வேண்டும். நானே கடவுள் தான், எனக்க மேல கடவுள் எல்லாம் இல்ல. பித்தலாட்டங்கள் எல்லாம். 

வாசிக்க வாசிக்க விசித்தரமாக இருக்கிறதோ. நாமும் எங்கோ அறிவாளி போல், முட்டாள்களாக இந்த சிந்தனை ஓட்டத்தின் பகுதியா இருக்கிறோம். 

மேலும் வாசிக்க: F. Nietzsche, Thus Spoke Zarathustra z (Kaufman) pp. 17-18, 1985.

கருத்துரையிடுக

0 கருத்துகள்