Fr. ஜோசப் சந்தோஷ்
தக்கலை மறைமாவட்டம்
தக்கலை மறைமாவட்டம்
மதங்களும் அவற்றின் போதனைகளும் இன்று சமூக வெளியில், குறிப்பாக தமிழகத்தில் பெரும் விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது. திராவிட கழகத்தின் பகுதியாக, பெரியார் முன்னெடுத்த சுயமரியாதை இயக்கம் (self-respect movement) சார்ந்தவர்கள் இதில் கணிசமான அளவு பங்கேற்கிறார்கள். 2023 ஆம் ஆண்டு, தற்போதைய துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின், பொதுவெளியில் சனாதன தர்மத்தை விமர்சித்த போது, அதற்கு மாற்றான சமதர்மா என்னும் சொல்லாடலை பயன்படுத்தினார். அது பொதுவெளியில் விவாதத்திற்கு வந்தது. சனாதனா தர்மா இந்து மரபோடும், அத்தோடு தொடர்புடைய நூல்களோடும் தொடர்புடையவை, அவை மாற்றத்தக்கதல்ல போன்ற வாதங்கள், சனாதனைத்தை ஆதரிப்போரிடமிருந்து எழுந்தன. இதற்கு மாற்றாக, சமதர்மத்தை ஆதரிப்பவர்கள் அரசியல் சாசனம், பொதுபுத்தி ஆகியவற்றின் உதவியுடன் சனாதனத்தை எதிர்த்தனர். (B. Kolappan, “Dravidian scion”, The Hindu, September 10, 2024, 17). கிறிஸ்தவ போதனைகளும் விமர்சிக்கப்படுவதுண்டு. குறிப்பாக, பெண் விடுதலை மையப்படுத்திய சிந்தனைகளில் பிற்போக்குச் சிந்தனைகளைக் கூறி பாதிரியார்கள் சிக்குவதும் உண்டு. இதற்கென அவர்கள், விவிலிய மேற்கோள்களையும் மரபுகளையும் ஆதாரமாக்குவதுமுண்டு. (Wonders of Religions |Women and Religion | Caste | Endogamy | Fake Id | Patti Tinkering, https://www.youtube.com/watch?v=pZDRvIwtmT8). ஆக, ஆகமங்கள்/ எழுதப்பட்ட புனித நூல்கள் மற்றும் மரபு ஆகிய இரண்டும் சொல்பவற்றை மனிதர்கள் ஏற்று அனுசரித்து நடக்க வேண்டும் என்னும் விவாதம் பொதுவெளியில் விவாதத்திற்கு வருகிறது. அவைகள் அடிமைத்தனங்களை அடைகாக்கின்றன என்பது பலராலும் முன்வைக்கப்படும் விமர்சனம்.
திருவிவிலியமும் திருமரபும் இறைவார்த்தையின் ஒரே களஞ்சியம்
கத்தோலிக்கர் அல்லாத சபைகளால், குறிப்பாக மார்ட்டின் லூதரின் படிப்பினையை ஏற்கும் திருச்சபைகள், திருவிவிலியம் மட்டுமே இறைவார்த்தையைக் கொண்டுள்ளது என்னும் வாதம் முன்னெடுத்ததோடு, திருமரபை முற்றிலுமாக நிராகரித்தது. இது கத்தோலிக்கத் திருச்சபைக்கு ஏற்புடயைதாக இல்லை. இவ்விரண்டிலும், இறைவார்த்தை அடங்கியிருக்கின்றன என்பதை முன்னிறுத்தியது. ஆனால் அதை புரிந்துக் கொள்வதில் ஒரு சிக்கல் நிலவியது. சிக்கல் என்னவென்றால், திருவிவிலியம் மற்றும் திருமரபு ஆகிய இரண்டும் இருவேறு களஞ்சியங்கள் என்றும் இவை இரண்டிலிருந்தும் இறைவார்த்தையானது பெறப்படுகிறது என்றும் புரிந்து கொள்ளப்பட்டது. இத்தகையதொரு கண்ணோக்கு, திருவிவிலியத்தையும், திருமரபையும் முதன்மைப்படுத்தி, இறைவார்த்தையை இரண்டாம் நிலைக்குத் தள்ளுகிறது (Cf. Joseph Ratzinger, “The Transmission of Divine Revelation”, Commentary on the Documents of Vatican II, Herbert Vorgrimler (ed.), London, Herder and Herder, 1967, 191). கடவுள் பேசவேண்டியதெல்லாம் பேசிவிட்டார் என்றும் அவர் மாற்றங்கள் அற்ற சமூக-பொருளாதார கட்டமைப்பை ஏற்படுத்திச் சென்றுவிட்டார் என்றும் இதன்வழி கருதிட இயலும். அத்தோடு, திருவிவிலியத்தின் ஆசிரியர் கடவுள் என்பது முக்கியத்துவத்தை இழந்தது. ஆசிரியரை இழந்த எழுத்தின் குரல் ஓங்கியது.
இதை அடையாளம் கண்ட வத்திக்கான் திருச்சங்கமானது, கடவுளின் அதிகாரத்தை முதன்மைப்படுத்தியது. ஆகையால், இறைவார்த்தைதான் களஞ்சியம், அது திருவிவிலியம் மற்றும் திருமரபு வழியாக மனிதர் புரிந்து கொள்ளும் விதத்தில் தரப்படுகிறது என்பதை முன்வைத்தது. அத்தோடு, இவை இரண்டும், கடவுளையே இலக்காகக் கொண்டு, அவரிடமேத் திரும்ப வேண்டும் என்பதும் வலியுறுத்தப்பட்டது. இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கத்தின், திருவெளிப்பாடு ஏடு இவ்வாறு கூறுகிறது: “திருமரபும் விவிலியமும் தம்மிடையே நெருங்கிய பிணைப்பும் தொடர்பும் கொண்டிருக்கின்றன. ஏனெனில் அவை இரண்டும் ஒரே இறைஊற்றிலிருந்து வெளிப்பட்டு, ஒரு குறிப்பிட்ட முறையில் ஒன்றாய் இணைந்து ஒரே குறிக்கோளை நாடிச் செல்கின்றன” (இறைவெளிப்பாடு (DV), 9).
இவ்வாறாக இறைவார்த்தையை முதன்மைப்படுத்திய வத்திக்கான் திருச்சங்கம், அதை நம்பி ஏற்கும் நம்பிக்கையாளர்களையும் கருத்தில் கொண்டது. அவர்கள் நடுவில் செயல்படும் கடவுளின் அருளின் ஆற்றல், அது வெளிப்படுத்தும் இறைஞானத்தையும் குறித்துத் தெளிவுப்படுத்தியது. நம்பிக்கையாளர்களை ஒற்றுமையில் நீடிக்கச் செய்யும் ஒன்றிப்பின் கண்ணிகளான திருத்தந்தை, ஆயர்கள் போன்றோர் கடவுளின் வார்த்தையின் பணியாளர்கள் என்பதையும் தெளிவுப்படுத்தியது. இயேசுவின் பன்னிரண்டு திருத்தூதர்களின் வாரிசுகளாக இருக்கும், இவர்களோடு நம்பிக்கையைப் பகிர்ந்து வாழும் நம்பிக்கையாளர்களும், இறைவார்த்தைக்கு பணி செய்பவர்களாகவே கருதப்பட்டார்கள். ஆனால், திருஆட்சி முறையில் தலைமை ஏற்போரின் (திருச்சபை ஆட்சியாளர்கள்) மொழிகள் வழிகாட்டும் தன்மைப் பெற்றவையாக முதன்மைப் பெற்றன (இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கம், திருச்சபை 10). திருச்சபை ஆட்சியாளர்கள் மற்றும் அதே நம்பிக்கை உணர்வைப் பகிரும் (sensus fidei, Cf. International Theological Commission, Sensus fidei in the Life of the Church, 2014) பொதுநிலையினரை உட்படுத்திய அமைப்பை திருஆசிரியம் என்று பெயரிட்டு அழைத்தது. இவ்வாசிரியம் இறைவார்த்தையை விளக்கும் அதிகாரத்தைப் பெற்றது என்றுக் கூறியது.
3. அடுத்ததாக விளக்கமளிப்பவர், திருச்சபையின் உயிருள்ள மரபை மறக்கக் கூடாது. அதாவது, திருச்சபையில் நடைமுறையில் உள்ள நம்பிக்கை, அறம் சார்ந்த மரபுகளிலிருந்து விலகுவதாக அமையக் கூடாது.
மனிதர்கள் வழியாக கடவுள் தாம் கூறவந்தவற்றைக் கூறியதால், அவை இன்றைய காலகட்டத்தில் விளக்கப்படும் போது, எச்சரிக்கை வேண்டும் என்பது தெளிவு. மேலும், திருச்சபையின் ஆசிரியத்தோடு சேர்ந்து நின்று விளக்கம் அளிக்க வேண்டும் என்பது கூறப்படுகிறது. திருத்தந்தை வெளியிடும் மடல்கள், ஊக்கவுரைகள், விளக்கவுரைகள், ஆயர்களின் மடல்கள் மற்றும் சுற்றுமடல்கள் என அனைத்தையும் விளக்கமளிப்பவர் கருத்தில் கொள்ள வேண்டும். இவற்றிற்கு முரணான படிப்பினைகளை விவிலியத்தை மேற்கோள் காட்டி கூறிவிட முடியாது. அவரும், இவர்களோடு சேர்ந்து விளக்கத்தைக் கொடுக்க வேண்டும். இங்கெல்லாம், முதன்மையாக நிற்க வேண்டியது கடவுளே ஒழிய, தனிமனித விருப்பு வெறுப்புகள் அல்ல. வெறுப்பகளை உமிழ்வதாக அது மாறினால் அது இறைவார்த்தையாக இருக்க முடியாது. ஆகையால்தான் திருச்சபை, “எழுதப்பட்ட அல்லது மரபுவழி வந்த கடவுளின் வார்த்தைக்கு அதிகாரப்பூர்வமான பொருள் விளக்கம் கொடுக்கும் பொறுப்பு இயேசு கிறிஸ்துவின் பெயரால் அதிகாரம் செலுத்தும் திருச்சபையின் உயிருள் ஆசிரியத்திடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனினும், இவ்வாசியரியம் கடவுளின் வார்த்தைக்கு மேற்பட்டதல்ல. மாறாக, அது இறைவார்த்தையின் பணியாள்” (இறைவெளிப்பாடு, 10) என்று கூறுகிறது. கடவுள் கூறவருபவற்றை விவேகத்துடன் கூறுபவரே திருச்சபையின் ஆசிரியத்தின் பகுதியாக இருக்க முடியும்.
0 கருத்துகள்